டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களிடம் தமிழக சபாநாயாகர் தனபால் நாளை காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி தலைமையிலலானஅதிமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள், சட்ட மன்ற வாக்கெடுப்பின்போது, ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அனால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்,அதை சபாநாயகர் ஏற்காததைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தில், திமுக சார்பில் கொறடா கட்சி சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சபாநாயகர் தனபாலை கடிந்த உச்சநீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரிடமும் நாளை காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது