சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேரந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கம் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேத்தில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரின் பைலட்டாக இருந்த  ராணுவ வீரர் ஜெயந்த் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மறைந்த ராணுவ வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,  அருணாசல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெய மங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.