சென்னை:
பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும் நோக்கில், தமிழகத்திற்கு மத்தியஅரசு ஒதுக்கிய நிதி, ரூ.3600 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக 2017-18 ஆண்டுக்கான நிதியாக 5920 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான செலவின விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்துக்கு ஒதுக்கிய தொகையில் இருந்து 3600 கோடி ரூபாயை தமிழகஅரசு உபயோகப்படுத்தாமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசு, ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 3020 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதில் 736 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்துவிட்டு மீதமுள்ள 2354 கோடி ரூபாயை தமிழக அரசு திரும்ப அனுப்பியுள்ளது. இதேபோல் பல்வேறு திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தாமல் நிதியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.