சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறை வருவாய் ₹8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறையில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், போலி பத்திரங்களை கண்டறிந்து, அதை சார்பதிவாளரே ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு துறையில் வருமானம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அரசுக்கு வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியவர், வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.8ஆயிரம் கோடியை கடந்துள்ளது என்று கூறினார்.