சென்னை: தமிழ்நாடு 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை செய்துள்ளது. இது மத்தியஅரசின் புள்ளி விவர பட்டியல் மூலம் தெரியவந்துளளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு சாதனைபடைத்துள்ளது. ஏற்கனவே 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியைக் கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.  14 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு மீண்டும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக,  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26வது ஆண்டில் 10.83% என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.19% ஆக இருந்தது.

உத்தரப் பிரதேசம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை எட்டியது மட்டுமல்லாமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முக்கியத் துறைகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மீட்சியே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த தரவுகளின்படி தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தற்போது ரூ.4.08 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ.2.05 லட்சமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் வருமானம் அதைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. கர்நாடகாவின் தனிநபர் வருமானம் ரூ.4.33 லட்சமாக உள்ளநிலையில், தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக உள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]