
சென்னை:
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்ததாவது:
“இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் பனிபொழிவு அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel