சென்னை:
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘நாளை வங்ககடலில் பலமான காற்று வீசும்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்-’’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.