சென்னை:

மிழகம் வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது, திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆந்திரா மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அண்ணா அறிவாலயம் வந்தார். அதைத் தொடர்ந்து திமுக தலைவர்களை சந்தித்தபின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

அபோது, ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது எராளமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழு தானதை சுட்டிக்காட்டியவர், இதனால் மக்கள் 2 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பின்னா் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

உலக நாடுகளில் சுமார் 10 சதவிகித நாடுகள் மடடுமே வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக கூறிய நாயுடு, பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கி, வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை நடத்தி வருகின்றனர். வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க கூறினால், அதற்கு தேர்தல் ஆணையம்  அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அதிமுக  ஆட்சி அல்ல, அது  மோடி ஆட்சி என்று கூறியவர்,  மக்கள் அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு செலுத்தப்பட்ட தாகவே அா்த்தம் என்று கூறியவர், தமிழகம், கா்நாடகா உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியவர்,  வருமான வரித்துறை என்ற சோதனையின் மூலம் எதிர்க்கட்சியினரை உளவியல் ரீதியாக பாதிக்க வைக்கிறது என்று கூறினார்.

டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? என்று கேள்வி எழுப்பியவர், தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது என்று ழகூறியவர் , ஸ்டாலினை முதல்வராக பாா்க்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஆசைப்படுகின்றனா், ஆகவே திமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.