சென்னை: பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் தமிழக மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா தெரிவித்து உள்ளது.

விஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள்  சேர்ந்து, விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில்    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைந்துள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையம்.  13 முறை பூமியை சுற்றி வருகிறது.  இது  மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த விண்வெளி  மையத்தில், அமெரிக்கா உள்பட நல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி, ஆய்வுகளையும்,  பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதிகளில் வானில் தெரியும், அதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்து உள்ளத.

அதன்படி,  நேற்று சென்னையில் தெரிந்தது. நேற்று  இரவு 7.09 மணி முதல் வானத்தில் 7 நிமிஷங்கள் வரை 400 கிமீ தூரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என  அறிவிக்கப்பட்டது. அதன்படி விண்வெளிய மையம் சிறியதாக கண்களுக்கு தெரிந்ததாக பொதுமக்கள் கூறினர்.

மேலும், இதைக்காண சென்னை பெரியார் அறிவியல் மையம், கிண்டியில் உள்ள அறிவியல் ஆய்வு உள்பட  பொதுமக்கள் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும் என அதன் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் மாவட்ட மக்கள் மே 14ம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

கோவை, உதகை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மக்கள் வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை பார்க்கலாம் என்றும் நாளை காலை (மே 12 அதி காலை ) 4.14, இரவு 7.07,  நாளை மறுநாளான மே 13 காலை 5 மணி, மே 14 காஜை 4.14 மணிக்கு விண்வெளி மையத்தை காணலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.