சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார்.  மேலும்தமிழ்நாட்டில் படித்த தலைவர்கள் தேவை என கூறியதுடன், ஆட்சியாளர்களையும் கடுமையாக சாடினார். இதன்முலம் அவர் தனது நேரடி அரசியல் என்றியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு, இளம் தலைமுறையினர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. பெற்றோர் என்ற முறையிலும் அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.  போதை பொருட்களை தடுப்பது அரசின் கடமை, ஆளுகின்ற அரசு அதை தவற விட்டு விட்டார்கள் என்றெல்லாம் பேச வரவில்லை. அதற்கான மேடை இது அல்ல. அரசாங்கத்தை விட நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்ககினார்..

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள காலை முதலே மாணவ, மாணவிகள்  தங்களது பெற்றோருடன் வந்து கலந்தகொண்டனர்.

முதல்கட்டமாக இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் 10 மணியளவில் மாஸ் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் உள்ளே வந்ததும் அங்கு வந்திருந்தவர்களுக்கு மேடையேறி நன்றி சொன்ன விஜய், பின்னர் கீழே சென்று மாணவர்களுடன் அமர்ந்துகொண்டு, அவர்களுடன் உரையாடினார். பின்னர், விழாவில் பங்கேற்ற மாணக மாணவிகளுக்கு   பாராட்டு சான்றிதழ், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, மரக்கன்று ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி பிரதிக்ஷா என்ற மாணவிக்கு வைர கம்மல் வழங்கி சால்வை அணிவித்து மரியாதை. மேலும் மூன்று மாணவர்களுக்கும் அதே பரிசு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி, 
சால்வை அணிவித்து வைர கம்மல் வழங்கப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி மாணவி தோஷிதா லட்சுமி வைர கம்மல் பரிசு. தர்மபுரி மாவட்டம் சந்தியா என்ற மனைவிக்கு , வைர மோதிரம் பரிசு. தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி தேவதர்ஷன் வைர மோதிரம் பரிசு. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி மாணவி காவியா ஸ்ரீராம் மாணவிக்கு வைரம் மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த  நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், “எதிர்கால தமிழகத்தில் இளம் மாணவ, மாணவிகளை சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி. பாசிட்டிவான மாணவர்களை சந்திக்கும்போது ஒரு மாற்றம் நடக்கும் என சொல்வார்கள். அது இன்று காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது.

நீங்க எல்லாரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும். சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள் தான். இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் மட்டும் நல்ல படிப்புகள் இல்லை. உலக அளவில் துறை சார்ந்த சிறந்தவர்கள் இருக்கிறார். இங்க நமக்கு எது அதிகம் தேவைப்படுகிறது என்றால் நல்ல தலைவர்கள் தான்.

நான் இதை  அரசியல் ரீதியாக சொல்லவில்லை. படிப்பு துறைகள் ரீதியாக சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நல்ல படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல படித்தவர்கள் தலைவராக வர வேண்டும். இப்போதைக்கு படியுங்கள், மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஒரு செய்தியை தகவல் வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்” என விஜய் தெரிவித்தார்.

மேலும்,  கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கங்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்ததோடு, வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு பின் பெற்றோர்களை விட அதிகமாக நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடக்கூடிய சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.

தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு ரொம்ப அதிகமாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றொர் என்கிற முறையில், ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்கிற முறையில் எனக்குமே ரொம்ப அச்சமாகத் தான் இருக்கிறது. இந்த போதைப் பொருட்களை எல்லாம் கட்டுப்படுத்துவது அரசுடைய கடமைனு சொல்லலாம். இளைஞர்களை இதிலிருந்து காப்பாற்றுவதும் அரசின் கடமை, ஆளும் அரசு அதையெல்லாம் தவறவிட்டுட்டாங்க அப்படிங்கிறத பத்திலாம் நான் இங்கு பேச வரல. அதற்கான மேடையும் இது இல்ல. சில நேரங்களில் அரசாங்கத்தை விட நம்ம லைஃபை நாம தான் பாத்துக்கணும். சுய ஒழுக்கத்தை  வளர்த்துக் கொள்ளுங்கள். Say no to temporary Pleasures, say no to drugs என்கிற இந்த உறுதி மொழியை நீங்க எல்லாரும் கடைபிடிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் நினைத்த மாதிரி மார்க் எடுக்க முடியாதவர்கள் வாழ்க்கையில் துவந்து விடாதீர்கள். வெற்றி தோல்வி நாம் சரியா சமமாக பார்க்க கற்றுக் கொண்டால் போதும் வெற்றி நம்மை தேடி வரும். Success never ending failure is never final. வருகின்ற மூன்றாம் தேதி பார்க்க இருக்கக்கூடிய மாணவர்கள் அவர்களுக்கும் சேர்த்துதான் பேசுகிறேன். எனவே அன்று வரும் மாணவர்களுக்கு மீண்டும் பேசி போர் அடிக்க விரும்பவில்லை. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என கூறி தனது பேச்சை முடித்தார்

இவ்வாறு பேசினார்.

விஜய்-ன் பேச்சு அவரது நேரடி அரசியல் என்றிக்கான முதல் கூட்டம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளை படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதுபோல என கடுமையாக  சாடியிருப்பதுடன், தற்போதைய திமுகவின் அரசியலையும், தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதையும், அதை தடுக்க தமிழ்நாடுஅரசு தவறி விட்டதையும் மறைமுகமாக சாடியுள்ளார்.