கரூர்:

ரவக்குறிச்சி அருகே அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான கரூருக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேறறார்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த தொகுதி அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் போலீசார் வாகனம், பள்ளப்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, பலியான முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், பலியான முதியவர்,  குறிக்காரன் வலசு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (70) என்பது தெரியந்துள்ளது.

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.