சென்னை: கொரோனா 3வது அலை அடுத்த ஓரிரு மாதங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த பிரப்ரவரி மாதம் முதல் பரவிய தொற்று, ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்தால், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கொரோனா 3வது அலை செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  3வது அலை குழந்தைகளும்  தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. அதற்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளதுடன், அதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

மத்தியஅரசும், 3ஆவது அலையால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு முழுவதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை இரண்டு அல்லது 3 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாப  புதிய உத்தரவுகளை போட்டுள்ளார். அதன்படி

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

3-வது அலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளன

‘ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.

குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்

இவ்வாறு  தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.