சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி, செய்திதுறை மற்றும் மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, அன்றைய தினம், அவையின் அலுவல் ஆலோசனைக் குழு கூடி, அமர்வின் கால அளவு குறித்து முடிவு செய்தது. தொடர்ந்த, மார்ச் 15, சனிக்கிழமையன்று மாநில அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்ரல் 15ந்தேதி) மீண்டும் அவை கூடியது.
இன்றைய அமர்வில், தமிழ் வளர்ச்சி, செய்தி, அச்சுத்துறை, எழுதுபொருள், மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.