சென்னை: தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது . இன்றைய பேரவை நிகழ்ச்சிக்கு  அதிமுக எம்எல்ஏக்கள்  கையில் கருப்பு அணிந்து பங்கேற்றனர். அவர்கள் கரூர் சம்பவம் குறித்து அவையில் கேள்வி எழுப்பும் வகையில் இந்த பட்டை அணிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை சபாநாயகர் பிபி அதிகமாகிவிட்டதோ என கிண்டல் அடித்தார்.

தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது கிட்னி திருட்டு,  கரூர் சம்பவங்களை கண்டித்தும், அதுகுறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்மிட்டு உள்ளனர்.  அதற்காகவே கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்றைய தொடரில்,  வினாக்கள், விடைகள் நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் நேரமில்லா நேரத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளனர்.

அவைக்குள் வந்ததும் பாமக எம்எல்ஏக்கள் தங்களது கோரிக்கை குறித்து முடிவு எடுக்க சபாநாயகரை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய சபாநாயகர்,  ”உட்காருங்க கேள்வி பதில் நேரம் முடியட்டும்… இது மக்கள் பிரச்சனை பேச வேண்டிய நேரம்” என கூறி அவர்களை அமைதியாக்கி அமர வைத்தார்.

 இந்நிலையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். இதுதொடர்பாக அவர், அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

சிறையில் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். அ.தி.மு.க.வினர் குறித்த சபாநாயகர், அமைச்சர் ரகுபதியின் கிண்டலால் சட்டசபையில் சிரிப்பலை உண்டானது.

இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் இரண்டு திருத்த சட்ட முன் வடிவுகள் இன்று தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.