சென்னை: புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வான இன்று பேரவையில், மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி தொடங்கிய நிலையில், நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். அதைத்தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதைடுத்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் அமர்வி இன்று (ஜன.7) காலை தொடங்கியது. இஅதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்க்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் உள்ள உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 11ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.