சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் (100 சதிவிகத்ம) கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது, பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 100 சதிவிகத மாணவ்ரகளுக்கும் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றன. இருப்பினும், பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள். இருந்தாலும், பொங்கல் விடுமுறைக்கு பின்பு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.