டெல்லி: மத்தியஅரசின் பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டுஉள்ளது. இதில், தமிழ்நாடு ஏ++ பெற்று முதலிடத்தில் உள்ளது.
பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில், அவற்றின் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையல், கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப், அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள், அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதற்காக தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு A++ என தரக் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.