டில்லி

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு டில்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது.

டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது.  கொரோனா அதிகரித்த போது அமலாக்கப்பட்ட ஊரடங்கால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  நேற்று டில்லியில் 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது 5,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த தளர்வுகளின் அடிப்படையில் அனைத்து கடைகளும் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.

டில்லியில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது.   சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு தொடங்கி உள்ள மெட்ரோ ரயிலில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி  பயணம் செய்கின்றனர்.   தற்போது மெட்ரோ ரயிலில் 50% பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.