மாமல்லபுரம்:
அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்ததால், பார் உரிமை யாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பார் உரிமையாளர் தற்கொலை குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கப்பெருமாள்கோவில், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் அடிக்கடி அந்த பகுதியை சேந்த அதிமுகவினர், காவல் துறையினர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்தால், கடனாளியாக ஆன நெல்லையப்பன், மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது, இந்த சம்பவம் குறித்த 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன்.