சென்னை; தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது என தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை சார்பில் இன்று சென்னை தரமணியில், தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். முன்னதாக, தொழில் வளர்ச்சி மாநாட்டின் அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள டிரோன்கள் கண்காட்சி அரங்கை பார்வை யிட்ட முதலமைச்சர், அது குறித்த சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றுதற்கு பின்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சுமார் 8 லட்சத்து 2000 கோடி அளவிலான முதலீடுகள் இதுவரை தமிழகத்தில் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், 3 லட்சத்து 2,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
இன்று தொடங்கி உள்ள இந்த தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 மாநாட்டில் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது என்பது குறித்த விபரங்களை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதப்டி இன்றைய மாநாட்டில் 15க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இதன் மூலமாக வரும் காலங்களில் அதிக அளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இன்று கையெழுத்திடப்படும் 15 ஒப்பந்தங்கள் மூலம் 10ஆயிரம் பேருக்கு வேலைவய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் நிறுவனங்களின் சிறப்பு மையங்களை திறந்து வைத்த முதலமைச்சர், தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2022 வெளியிட்டடார். தொடர்ந்தது, தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம் மற்றும் விமான பயிற்சி நிறுவனத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உள்பட மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டடுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், கடந்த 15 மாதங்களில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. உயர் கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்கு கிறது. திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி காண முடியும். தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல தொழில் வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளும் தமிழ்நாட்டுக்கு பலன் தரும் மாநாடுகளாக அமைந்துள்ளன.
4ம் தலைமுறை தொழில் வளர்ச்சி, தொழில்நுடப வளர்ச்சிக்கு தயார்படுத்தி கொள்ள தமிழக அரசு திட்டம் தீட்டி அமல்படுத்துகிறது. 4ம் தலைமை தொழில் வளர்ச்சிக்கான, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திறன்மிகு மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகின்றன. உற்பத்தித்துறை, மட்டுமின்றி சேவை துறையும் ஒன்றாக இணைந்து வளர்ந்தால் தான் அதி அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி. ஹச்சி எல் நிறுவனத்தின் விமான தயாரிப்புக்கான உதிரி பாகங்கள், உபகரணங்கள், தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள், அனைத்துத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. டிரோன்களை இயக்கம் ரிமோட் பைலட்டுகளுக்கான பயிற்சி மையங்கள் மதுரை உள்ளிட்ட இடங்களில் அமையும்.
மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான விமானிகளாக உலகை வலம்வர இயலும். நாட்டிலேயே முதல் திறன்மிகு மையம், தரமணியில் திறக்கப்பட்ட்டுள்ளது. 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது. உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது என்றும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.