சென்னை:
பெட்ரோல் டீசல் மீது வாட் வரியை தமிழகஅரசு உயர்த்தி உள்ளது. இதனால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததுள்ளது.
வாட் வரி உயர்வு காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முடக்கி போட்டுள்ளது. பெரும்பாலான போக்குவரத்துகள் முடக்கப்பட்டு உள்ளதால், குரூட் ஆயுள் விலையும் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்தால் கடந்த மாதம் மத்தியஅரசு வரியை உயர்த்தியது.
இந்த நிலையில், தற்போது தமிழக அரசும் வாட் வரியை உயர்த்தி உள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 65.71 ஆகவும் தற்போது விற்கப்படுகிறது. நாளை முதல் பெட்ரோல் விலையில் 3.25 ரூபாய் உயர்த்தப்படுவதால் 75.53 காசுகளாகவும். டீசல் விலை லிட்டருக்கு 2.50 உயர்த்தப்படுவதால் ரூ.68.21 ஆக விற்கப்படும் என தெரிகிறது. விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
விலை உயர்வுக்கு காரணமாக மத்திய மாநில அரசுகள் எப்போதும்போல நிதிச்சிக்கல் என காரணம் காட்டியுள்ளது.