சென்னை:
11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு ஆகிய இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவ- மாணவிகள் 11-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.