டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப்பேசினார். முன்னதாக இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்iகயும் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

]

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். பல்வேறு மாநிலங்களின் கவனர்கள் மாற்றம் மற்றும் நியமனங்கள் நடைபெற்ற நிலையில், தமிழக கவர்னரின் திடீர் டெல்லி விஜயம் பரபரப்பை ஏற்படுத்தியது. பன்வாரிலால் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லி சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித்  இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப்பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடியை தமிழக கவர்னர் சந்தித்துப் பேசுவது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.