சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிர்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்து எஸ்பி ரவளி பிரியா, சீருடை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர், ராணிப்பேட்டையில் நடத்திய கலந்தாய்வைத் தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை கலெக்டர்கள் உள்gl 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா சமூக பாதுகாப்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்திரரெட்டி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த தீபா சத்யன் சென்னையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.
சென்னைப் பெருநகர காவல் துறை கொளத்தூர் காவல் மாவட்டம் துணை ஆணையர் ராஜராம், கடலூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
கட்டாய காத்திருப்புப் பட்டியலில் உள்ள எஸ்பி ரவளி பிரியா, தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்பியாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பி. ரவளிபிரியா, தஞ்சை உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேவையற்ற வகையில் பேசி பிரச்சினை பூதாகரமாக வெடிக்க காரணமாக இருந்தவர். மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ வெளியானபோது, செய்தியாளர்களிடம் பேசிய அப்பேது, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா “மாணவி பேசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எப்படி எடுக்கப்பட்டது? குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக எந்தவொரு குற்றச்சாட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த புகாரில் அவர் முன்கூட்டியே மதம் மாற யாரும் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு இல்லை என்று கூறியது சர்ச்சையானது.