
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
அடுத்த மாதம் (அக்டோபர் 17ந்தேதி தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இதையொட்டி பொது மக்கள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவர். இதன் காரணமாக பயணிகளின் வசதிகளை முன்னிட்டு, சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த 3 நாட்களில் 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]