சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரட்ங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிகஅரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 7ந்தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் மே 17ந்தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பதாகவும், ஆனால், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தவை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த 9ந்தேதி அன்று மேல்முறையீடு செய்யப்பட்து. அந்த மனுவில், ‘உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது என்றும், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனுவில் பிழை இருப்பதாக கூறி மனுவை உச்சநீதி மன்றம் விசரணைக்கு எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.