சென்னை: விமர்சனங்களை தொடர்ந்து, மகளிர் பேருந்தை முழுவதுமாக ‘பிங்க்’ ஆக மாற்றத் தொடங்கியது தமிழகஅரசு. அதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை தீவிரமாக இறங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு மகளிருக்கு இலவச பயணம் செய்யும் வகையில் பேருந்துகளை இயக்கி வருகிறது. இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இலவச பேருந்துகளை அடையாளம் காணும் வகையில், பேருந்துக்கு பிங்க் கலர் வர்ணம் தீட்டுவதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, பேருந்தின் முன்புறமும், பின்புறமும் மட்டும் பிங்க் கலர் வர்ணம் பூசப்பட்டது. இந்த புதுமையான பேருந்து சேவையை முதல்வரின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது பேருந்தை பார்த்த பொதுமக்கள், எள்ளி நகையாடினர். பார்ப்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. ஏராளமான மீம்ஸ்கள் அனைத்து சமூக வலைதளங்களில் பரவி கேலிப்பொருளாக சித்திரித்தன.
இதையடுத்து, தற்போது மற்ற மாநிலங்களில் செயல்படும் பெண்களுக்கான பேருந்துகள் போல, பெண்களுக்கான இலவச பேருந்தை முழுமையாக பிக்க் கலரில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறை தொடங்கி உள்ளது.