சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் முடிவு செய்துள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் மாசு அதிகரிப்பை தடுக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு வாகனங்கள் மின்சாரம் மற்றும் எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அதிகரித்து வரும் மின்சார வாகனங்கள், சார்ஜ் செய்யும் அளவுக்கு போதுமான சார்ஜிங் மையங்கள் இல்லை.
இதன் காரணமாக, தமிழ்நாடு அரசும், சென்னை மாகராட்சியும் இணைந்து சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க உள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்,
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,
7) மெரினா கடற்கரை பார்க்கிங்,
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.