சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்த்தப்படவில்லை என்பத சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுடுள்ளது.

1 லிட்டர் ஆவின் நெய் ₨515ல் இருந்து ₨535 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அரை லிட்டர் தயிர் ₨27ல் லிருந்து ₨30 ஆக உயர்ந்துள்ளது.  குல்பி ஐஸ் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது என்கிற அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் விலை உயர்வுக்கு  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.