சென்னை: நாடு முழுவதும் லாக்டவுன் செப்டம்பர் வரை மத்தியஅரசு நீடித்துள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து உள்பட பல்வேறு தளர்வுகளை அன்லாக்3 பெயரில் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து மற்றும் பேருந்துகள் இயக்கத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் நாளை (ஆகஸ்டு 31) உடன் முடிவடைய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்திருப்பதுடன், ஊரடங்கில் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவித்து உள்ளது. அதன்படி, போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதுடன், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும், மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது என்றும், மாநிலத்திற்குள்ளோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் தேவையில்லை என்றும் அதிரடியாக அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை மேலும் தொடர நினைத்திருந்த தமிழகஅரசுக்கு, மத்திய அரசின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில், இன்று பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், கொரோனா தொற்றால் கடந்த 5 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டள்ள பொது போக்குவரத்து சேவையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில், குறைவான பேருந்து சேவை இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்படாமல், பணிக்கு செல்லும் வகையில், பொது போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.
அத்துடன் மத்தியஅரசின் அறிவிப்புபடி இ-பாஸ் சேவையையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.