சென்னை:  கோவை குறிச்சி சிட்கோவில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில், அதற்காக தேசிய அளவில் டெணடர் கோரப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே தங்க நகை தயாரிப்பில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.  தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம்  மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு  25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இத்தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் இதன்மூலம் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் கோவையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ₹126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவானத் திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது.

அதன்படி,  கோயமுத்தூர்  குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.  அதன் முதற்கட்டமாக, தொழிற்பூங்கா அமைப்பதற்கான  விரிவானத் திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா,லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கு தங்க நகை தொழில் பூங்கா அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.