சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி பிப்ரவரி முதல் சென்னையில்  சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு 10 நிலை கொண்ட அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5  ரூபாயும், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10 கிலோ மீட்டர்  தூரத்திற்கு 7 ரூபாயும், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு  8 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கிலோ மீட்டரிலிருந்து 18 கிலோ மீட்டர் வரை பயணிப்பதற்கு டிக்கெட் கட்டணம் 9 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக 18 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டர் வரை  உள்ள பயணத்திற்கு டிக்கெட்  கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள

இந்த மினி பேருந்துகளுக்கான புதிய கட்டண முறை இந்தாண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் இயக்கம்: சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு பச்சைக்கொடி!