சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் ஏற்படும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள,  அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து  மக்களை பாதிக்காதவாறு பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாடாக,  தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாநகராட்சி ஆணையர் தலைமையில், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஏற்படும்  வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் ஆணையத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை இடம்பெற்றுள்ளது.

இந்த பேரிடர் ஆணையத்தின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் இருப்பார் என்றும், ஆணையத்தின்  உறுப்பினர்களாக சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர்கள், மாநகர சுகாதாரத்துறை அலுவலர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கென தனி பேரிடர் மேலாண்மை ஆணையம், சென்னை நகர நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையம் (CCUDMA). மாநில அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்டபடி, சென்னை மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்துவதற்கு இந்த ஆணையம் பொறுப்பாகும்.

பருவமழை காலத்தின்போது, தமிழ்நாட்டின் தலைநகரா சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், அவை யானை பசிக்கு சோளப்பொறி போல, எந்தவித பயனும் அளிக்காத நிலையே தொடர்கிறது. மேலும்,  நகரமயமாதல் காரணமாக சென்னையில் ஆகிரமிப்பு அதிகரித்து, நீர்நிலைகள் பல குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறை சென்னையில் கனமழை கொட்டும்போதும், வீடுகள் வெள்ளக்காடுகளாக மாறுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயெ முடங்கிப்போகும் நிலை நேரிடுகிறது. இதனால், அவசர காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில், தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாக அரசு நிவாரண பணிகளையும், உதவிகளையும் செய்ய முடியும். மாநிலம் என நம்பப்படுகிறது.