சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதல்வர் அவர்களிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.  அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதல்வர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்

[youtube-feed feed=1]