சென்னை: மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்து உள்ளது.
இலவசங்களை வாரியிறைத்து வரும் தமிழ்நாடு அரசு, வருமானத்துக்காக அனைத்து வகையான வரிகள் மின்கட்டணம், பதிவு கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி வருகிறது. ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மீண்டும் ஜுலை மாதம் மின் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடா்ந்து இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை வதந்திகளை நம்பாதீர்கள்… தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.