சென்னை: தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் டைடல் பார்க்குகளை அமைத்து வரும் நிலையில், திருவண்ணாமலையிலும் 4 மாடிகளைக்கொண்ட மினி டைடல் பார்க் அமைச்ச டெண்டர் கோரி உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், முக்கிய நகரங்களில் டைடல் பார்க்குகளை அமைத்து அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்பை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. சமீப காலமாக, தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைக்காக இளைஞர்கள் சென்னை, கோவை, பெங்களூர் போன்ற நகரங்களை நாடிச்செல்லும் நிலையில், அவர்களுக்கு தேவையான பணிகளை, அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேய ஏற்படுத்தி தரும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மினி டைடல் பார்க்குகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. சென்னையில் எப்படி டைட்டில் பார்க் செயல்படுகிறதோ அதேபோல மற்ற மாவட்டங்களில் மினி டைடல் பூநியோ என்ற பெயரில் சிறிய அளவிலான டைடல் பார்க்குகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பார்த்குகள் கட்டப்படும் என அண்மையில் அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சி, முதல் கட்டமாக திருவண்ணாமலையில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு டைடல் நிறுவனம் ஒப்பந்தம் கோரி இருக்கிறது. 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் இங்கே தங்களுடைய அலுவலகங்களை நிறுவ முடியும். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஐடி சார்ந்த வேலை வாய்ப்புகளை தங்கள் மாவட்டத்திற்குள்ளேயே பெறுவார்கள்.
தற்போதைக்கு விழுப்புரத்திலும் , தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்திலும் மினி டைடல் பூங்காவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலையிலும் அமைய உள்ளது. 2ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.