சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு அமைத்து வரும் தோழி விடுதிகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மேலும் 12 இடங்களில்  தோழி விடுதிகள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளும் வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாப தங்குவதற்காக, தமிழக அரசே  தோழி  என்ற பெயரில் மகளிர் விடுதி தொடங்கி நடத்தி வருகிறது. இந்த தோழி விடுதிகள், தற்போத,   சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரும் கிறது.

இந்த நிலையில், மேலும் 12 இடங்களில்  தோழி விடுதிகள் கட்டப்படும் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். தமிழக பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட அரசு டெண்டர் கோரி உள்ளது.

அதன்படி, உதகை, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம், வீர சோழபுரம், நாமக்கல்லில் விடுதிகள் கட்டப்பட உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களிலும் விடுதிகள் கட்டும் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.