சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க  அனைத்து மாவட்டங்களில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 110 தனியார்மருத்துவ மனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பும் நோயாளிகள் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

நோயாளிகள்  தங்களது சொந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு நிர்ணயித்துள்ள சிகிச்சை முறைகளை தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும்.

தாங்கள் அளித்து வரும் சிகிச்சை, நோயாளிகள் குறித்த விவரத்தை தினசரி அறிக்கையாக தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் மருத்துவ இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரத்தில் அவ்வப்போது தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் 11 மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் 110 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கொரோனா சிகிச்சையளிக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் (மாவட்டம் வாரியாக).வெளியிடப்பட்டு உள்ளது.