தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாய்க்கடியின் காரணமாக மனிதர்களிடையே ரேபிஸ் நோய் தொற்றும் அதிகரிப்பதை அடுத்து இந்த பிரச்சனைகக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் பரவுவதை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி