சென்னை:  கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க தமிழக அரசு   ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை  வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,   2021-22 அரவை ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரும்பு விவாசாயிகளுக்கான நிலுவை தொகை அனைத்து ஆலைகளிலும் வைக்கப்பட்டுள்ளதால்,  மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும்,  கரும்புக்கான கடன் வாங்கமுடியாமலும் விவசாயிகள் தவித்து வந்தனர்.  இந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆணையை வெளியிட்டிருக்கிறது.  மேலும் ரூ.252 கோடி இரண்டு மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் போதிய விலை இல்லாமலும்,  தரமான கரும்புகள் வழங்க முடியாமல் மத்திய அரசு வழங்கக்கூடிய தொகையை முழுமையாக பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில்,  ரூ.252 கோடி ஒதுக்கிடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது  கரும்பு விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியாக மாறியிருக்கிறது.

[youtube-feed feed=1]