கரூர்: குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம்” என கரூரில் இன்று 1000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2நாள் பயணமாக நேற்று கோவை சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், தொடர்ந்து ஈரோட்டிற்கு சென்றார். அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இதனையடுத்து இன்று கரூரில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பயனர்களுக்கு இலவச மின்சாரம் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினா குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம்” என மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள் .இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது. ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு சாத்தியமா? என்று கேட்டார்கள். முடியுமா? என்பதை முடித்து காட்டுவதுதான் திமுக என்றவர், தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது: பணப்புழக்கம் அதிகரித்துள்ளது .தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது என்று கூறினார்.