டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரையும்  விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய் தலைமையிலான அமர்வு, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக மாநில அரசின் தீர்மானத்தின்மீது, கவர்னர் முறையான நடவடிக்கை எடுக்கமல் காலம் தாழ்த்தியதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்து உள்ளது.
ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் விடுதலை செய்வது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2014ம் ஆண்டு முதலமைச்சராக இரந்த  ஜெயலலிதா  ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கான தீர்மானம் சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால், அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து, மீண்டும் கடந்த 2018ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மீண்டும்  7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்த சூழலில், நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அடுத்து, விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில், 2022ம் ஆண்டு மே 18ஆம் தேதி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சட்டப்பிரிவின் கீழ் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும்  மற்ற 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும், திமுக அரசும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான வகையில் மூன்று ஆண்டுகளாக ஆளுநர், தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தது.  6 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் மற்ற 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…