சென்னை: ரூ.500 கோடியில்   தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு குறைக்கடத்தி மிஷன் 2030 (TNSM 2030) இன் கீழ், ரூ.500 கோடி மதிப்பீட்டில் குறைக்கடத்தி வடிவமைப்பு ஊக்குவிப்பு திட்டத்தை தமிழ்நாடு தொடங்கியுள்ளது. இது, கற்பனையற்ற வடிவமைப்பு நிறுவனங்களுக்கு இலக்கு மானியம் மற்றும் முன்மாதிரி மானியங்களை வழங்குவதாகவும், TIDCO (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்) தலைமையிலான பொது-தனியார் கூட்டாண்மை மூலம் சிறப்பு மையங்களை (CoEs) அமைப்பதாகவும் மாநில அரசு    ஆகஸ்ட் 18 அன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில்,  டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தி போன்ற தொழில் வளர்ச்சியில் மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் டிஜிட்டர்  மற்றும் எலக்ட்ரானிக் சாதனை தொழிற்சாலைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில், சென்னை மட்டுமின்றி, கோவை உள்பட பல பகுதிகளில் செமிகண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முதல்முறையாக, #குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி உபகரணங்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்து சாதனை செய்துள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில்,  ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  ஏற்கனவே இது தொடர்பாக கடந்த ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை  செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செமி கண்டக்டர் இயக்கம் மூலம்  5 வகை திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.   அதில்,  செமி கண்டக்டர் வடிவமைப்பு மேம்பாட்டு திட்டம்,  செமி கண்டக்டர் சோதனை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் என  திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும்,  சிறிய அளவிலான செமி கண்டக்டர் உற்பத்தி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் கோவை, பல்லடத்தில் 100 ஏக்கரில் தொழில் பூங்கா அமைகிறது.

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.