
சென்னை,
தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடியது.
இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. 11.30 மணி அளவில் கூட்டம் முடிவடைந்தது. சுமார் 1 மணி நேரம் கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் அரசு பணிகள், உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது, காவிரி விவகாரம் போன்றவை குறித்து விவாதித்தாக தெரிகிறது.
கடந்த மே., மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக அரசு பொறுப்பேற்றப்பின் நடைபெற இருக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து துறை பொறுப்புகளை ஏற்ற பிறகு பன்னீர்செல்வம் நடத்தும் முதலாவது அமைச்சரவை கூட்டமும் இதுதான்.
கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Patrikai.com official YouTube Channel