சென்னை

ஜிஎஸ்டி யில் மருந்துகளுக்கு சரியான வரி விகிதம் இன்னும் தெரியாததால்  சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படாததால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருந்துகளுக்கான வரி விகிதம் இன்னும் ஜி எஸ் டி யில் சரிவர சொல்லப்படவில்லை.  ஏற்கனவே பல மொத்த வியாபாரிகள் மருந்துகளின் இருப்பை ஜூலை 1க்கு முன்பே குறைத்துக் கொண்டனர்.  சரியான வரி விகிதம் தெரிந்த பின் இருப்பை அதிகரித்துக் கொள்ள எண்ணினர்.

ஆனால் ஜி எஸ் டி அமுலாகி கிட்டத்தட்ட ஒரு வார காலமாகியும் வரி விகிதங்கள் அறிவிக்கப்படவில்லை.   ஏற்கனவே இருப்பில் உள்ள மருந்துகளுக்கும் சரியான வரி விகிதம் தெரியாமல் பில் போட முடியவில்லை.  இதனால் சில்லறை வியாபாரிகளிடம் மருந்து இருப்பு குறைந்துக் கொண்டு வருகிறது.  பல மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

உடனடியாக ஜி எஸ் டி வரி விகிதத்தை அறிவிக்காவிடில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அஞ்சுகின்றனர்