இலங்கை,

மிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் புதிய மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடுக்கடலில் மீன்பிடித்து வரும், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும், கைது செய்தும் தொல்லைக்கொடுத்து வரும் இலங்கை அரசு, தற்போது தமிழக மீனவர்களை அடியோடி ஒழிக்கும் விதமாக கடற்தொழில் சட்டத் திருத்த மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த சட்டத்தின்டி, எல்லைதாண்டி  இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள், இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்ததில் கூறப்பட்டுள்ளது.

இத்ந சட்டத் திருத்த மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தாக்கல் செய்தார்.

இதன் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விடும் என்றும், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நிலை அடியோடி பாதிக்கப்படும் என அஞ்சப்படு கிறது.

இதற்கு தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த சட்டம் நிறைவேற்றுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.