தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பதிப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய மின்சாரத்தின் அளவு மற்றும் அதனால் மின் கட்டணத்தில் கிடைக்கக்கூடிய லாபம் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சூரிய மின் சக்திக்கு மாறுவது எப்படி என்பது குறித்தும் அதற்கு அரசு வழங்கும் மானியம் குறித்தும் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மானியம் பெறுவதற்கு இணையத்தளம் மூலமே நேரடியாகவும் விண்ணப்பிக்க வகை செய்துள்ளது.

[youtube-feed feed=1]