சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதி மன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளுக்கு மட்டும்  தேர்தல் நடத்த தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இன்று மாலை செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறும் என்றும்  மாநில தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

ஏற்கனவே அறிவித்த தேர்தல் அறிவிப்பு படி, இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்க வேண்டும். ஆனால், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு காரணமாக, வேட்புமனு பெற வேண்டாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் 11 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தவுள்ளது. இதில், புதிதாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது பற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், அதனால்,  இன்று தேர்தல் அறிவிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இன்று மாலை தேர்தல் ஆணையர் என்ன சொல்லப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.