சென்னை : கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே  சென்னையின் குடிநீர் தேவைக்காக  சென்னையின் புறநகர் பகுதியான, கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின்  நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த புதிய நீர்த்தேக்கமானது,   ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு  1.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கமாகும்.   இதன்மூலம்,   ஆண்டுக்கு 2.25 டி.எம்.சி. வெள்ளநீரை சேகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவைக்காக கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு