சென்னை: ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப ஒப்புதல் வழங்க கோரி மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ₹10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் திரு. என். பைரேன் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.
மணிப்பூரில் உள்ள தமிழர்கள் உயிருக்கும் உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் 50,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. தார்பாலின், படுக்கை விரிப்பு, கொசுவலைகள், மருந்துகள், நாப்கின், பால் பவுடர் போன்றவற்றை வழங்கத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.